இன்று (வெள்ளிக்கிழமை) மாலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம்இந்த மகஜர் கையளிக்கப்பட உள்ளதாக அனைத்து இலங்கை பேரூந்து பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதில் ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபாவாக குறைக்கப்பட வேண்டும் என்றும், ஏனைய கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் பேரூந்து பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.