
காங்கிரஸ் கூறுகிறது. சிஏஜி கொடுத்த அறிக் கையைக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தின் முன்பாக தெளிவாகவும், உண்மையாகவும் அறிக்கையை மத்திய அரசு வழங்கியுள்ளது. ரஃபேல் விவகாரம் தொடர்பான தணிக்கை மதிப்பீடு முடிவு, சிஏஜி முன்பாக உள்ளது. அனைத்து உண்மைகளும் சிஏஜி முன்னிலையில் ஒப்படைக்கப் பட்டுவிட்டன. அறிக்கை வந்ததும் அது நாடாளுமன்ற பொதுக் கணக் குக் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.
ஆனால் இந்த விவகாரத்தில் மோசமான இழப்பாளர்கள் (காங்கிரஸ்) இந்த உண்மையை ஏற்க மாட்டார்கள். அவர்கள் உண் மையை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அடுக்கடுக்கான பொய்யைச் சொல்லி வந்தவர்கள் தற்போது உச்ச நீதிமன்றத் தீர்ப் பிலும் குறையைக் காண்கிறார்கள்.
ஆரம்பம் முதலே பொய்யைக் கூறி வந்தவர்கள், தற்போது தீர்ப்பு வந்துள்ளபடியால் அடுத்த பொய்யைத் தயார் செய்து வருகிறார்கள்.
இறுதியானது நீதிமன்றத் தீர்ப்பே. எனவே இந்த விவகாரத் தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
நீதிமன்றமே தெரிவித்துவிட்ட பிறகு இந்த விஷயத்தில் வித்தியா சமான கருத்தை நாடாளுமன்றக் குழுவால் எப்படிக் கூற முடியும்?
இவ்வாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
