மட்டக்களப்பு மாவட்ட
இந்து குருமார்கள் பேரவையின் வேதாகம பாடசாலையும் அலுவலகமும் கவனிப்பாரற்ற நிலையில்
காணப்படுவதாக மாவட்ட இந்து
குருமார்கள் பேரவையின் குருக்கள் கவலை தெரிவித்தனர்
குறித்த கட்டடம் தொடர்பாக மாவட்ட
இந்து குருமார்கள் பேரவையின் உபதலைவரும்
,பொருளாலரும் கருத்து தெரிவிக்கையில் கடந்த 2015 ஆண்டு
பாராளுமன்ற உறுப்பினர்களினால் மட்டக்களப்பு புதுமுகத்துவாரம் நாவலடி பகுதியில்
அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட இந்து குருமார்கள்
பேரவைக்கான வேதாகம பாடசாலையும் அலுவலகமும் தற்போது
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக
மாவட்ட இந்து குருமார்கள்
பேரவையின் குருக்கள் கவலை தெரிவிப்பதாக தெரிவித்தனர்
மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த கட்டிடம் மட்டக்களப்பு மாவட்ட வர்த்த
சங்கங்கள் , தனவந்தர்களின் நிதி உதவியுடன்
ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவே கைவிடப்பட்ட இந்த கட்டடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரன் வழங்கி
இரண்டு இலட்சம் நிதியினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்டடம் ஒரு அறையுடன்
பூர்த்தி செய்யப்படாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்
மாவட்ட இந்து
குருமார்கள் பேரவைக்கான வேதாகம
பாடசாலையையும் அலுவலகத்தையும் முழுமையாக நிர்மாணித்து
முடிப்பதற்கு நிதிவுதவியினை வழங்குமாறு மாவட்ட
இந்து குருமார்கள் பேரவையின் உபதலைவர் கு
உதயகுமார் குருக்கள் மற்றும் இந்து குருமார்கள் பேரவையின் பொருளாளர் சி .
குகநாத சர்மா ஆகியோர் வேண்டுகோள் விடுக்கின்றனர்
