
பொதுஜன பெரமுன முன்னணியின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“மேன்முறையீட்டு நீதிமன்றினால் வழங்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு தொடர்பில் பிழையான கருத்துக்கள் சமூகங்களில் பரவி வருகிறது. இன்று நாட்டில் பிரதமரோ அல்லது அமைச்சரவையோ இல்லை என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
மேன்முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடையுத்தரவினால், அரசாங்கத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் பிழையான ஒரு கருத்தாகும்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனைக் கூறவில்லை. அந்த நபர்கள் இன்னும் அந்தப் பதவிகளில் நீடிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு செயற்படவே இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிகளுக்கான அதிகாரம் தான் அவர்களுக்கு இல்லை.
ஒரு அரசாங்கத்தை நீக்கிய எந்தவொரு சந்தர்ப்பமும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை. இதனாலேயே நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று உயர்நீதிமன்றை நாடியுள்ளோம்.
நாட்டுக்கு ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைக்க வழியேற்படுத்திக் கொடுக்குமாறு கோரியுள்ளோம். நாளுக்கு நாள் நீடிக்கும் அரசியல் நெருக்கடியின் விளைவாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தலுக்குச் செல்வது ஒன்றே. மனித உரிமையின் உச்சக்கட்டமாகவே பொது வாக்கெடுப்பு காணப்படுகிறது. இன்று நாட்டில் பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றை நிவர்த்தி செய்ய தற்போதைய நிலைமையில் முடியாமல் உள்ளது.
இதனாலேயே பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்துகிறோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
