கனடா, சிட்னி பகுதியில் உள்ள வாடிக்கையாளர் தொடர்பு சேவையொன்று மூடப்பட்டதால் சுமார் 600இற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிட்னி பகுதியில் உள்ள செர்வி கொம் என்ற நிறுவனமே நஷ்டத்தால் இவ்வாறு கடந்த வியாழக்கிழமை மூடப்பட்டது.
இதனால் பணியாளர்கள், நிறுவனத்தின் நிர்வாகி என பலரும் இதற்கு தங்களது அதிருப்தியையும், கண்டனங்களையும் வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மூன்று வாரங்களே உள்ள நிலையில், நிறுவனத்தின் இந்த முடிவானது நிறுவன ஊழியர்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
19 ஆண்டுகாலமாக இயங்கிவந்த குறித்த நிறுவனம், உச்ச நிலையில் இருந்தபோது 700 பேர் இங்கு பணியாற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் 80 சதவீதமானவர்கள் முழு நேர பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





