திங்களோடு திகழும் சோதி
கங்கையை சிகையில் சூடி
பொன்னுடல் மின்ன ஆடும்
அற்புத நடனம் எண்ணில்
என்னினுள் இன்பம் தானே
பொற்பதன் ஆட ஆட...
பாகமாய் மங்கை ஆட
நாகமும் மானும் அங்கே
மழுவுடன் சேர்ந்தே ஆட
அல்லல்கள் தூர ஓடும்
போற்றியே போற்றியே
சிவசிவா போற்றி போற்றி
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான் 🙏
