
இனிய காலைவணக்கம் என் அன்பு உறவுகளே🙏
விழிகள்மூடி விழித்திருந்தாலும் தவத்தில் மிதந்து தனித்திருந்தாலும் பட்டினி இருந்து பசித்திருந்தாலும்
பரமசிவனை அணுகுவது என்பது அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவேறிவிடாது.
ஆனால் எவர் ஒருவர் பாரில் எங்கும் நிறைந்து வியாபித்து இருக்கின்ற சர்வேஸ்வரன் தமக்குள்ளும் நிலை கொண்டுள்ளதை பூரணமாக அறிவார்கள் ஆகில் அவர்கள் அகிலம் எல்லாம் அலைந்து சிவம் தேடி அல்லல் படமாட்டர்கள் .
இதனை விடவும் தமக்குள் தேடி தாம் சிவத்தின் தன்மையை உணர்ந்ததனால் அவர்கள் தம் மன எண்ணங்களில் தீபங்களை ஏற்றி அக அழுக்குகளை அத்தீயை கொண்டு எரித்து மனதைப்புடம் போட்டுக்கொள்கின்றனர்.
அத்தகையவர்களுக்கு அந்த சிவனே ஆசிரியன் ஆகி விடுகின்றான்.
தமிழ் முனி அகத்தியருக்கு எம்பெருமான் சிவனே தமிழை கற்றுகொடுத்ததைப்போல எமக்கும் வேண்டிய அனைத்தையும் அண்ணலே கற்றுதந்துவிடுகின்றான்.
மெய் ஞானம் என்பது காசு பணத்தால் வாங்கமுடியாத ஒன்று அது ஆண்டவனின் அநுக்கிரகத்தினாலும் எங்களின் ஆற்றல்களாலும் மட்டுமே சாத்தியமாகும்.
ஆகையால் சிவனின் அருளை பெற்று எங்களில் ஆற்றல்களை வளர்த்துக்கொள்வோம்.
சங்கரன் ஜெய சங்கரன் ❤️
சிவனடியான்🙏
