
கடந்த 1991 - 96ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஏராளமான சொத்துக்கள் சேர்த்ததாக, பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என திமுக பொது செயலாளர் க.அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி இவ்வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
கடந்த 2014ம் ஆண்டு, நீதிபதி குமாரசாமி ராஜா, சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதைதொடர்ந்து திமுக சார்பில், இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார்.
பின்னர், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியானது. அதில், சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
புத்தாண்டில் புதிய அரசியல் அதிரடிகளை காணப்போகிறது தமிழகம். எடப்பாடி அதற்கான திட்டம் தீட்டி வருகிறார். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஏற்பாடுகள் ஏறத்தாழ முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை உருவாக்கினால் மட்டுமே, தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை துணிச்சலாக எதிர்கொள்ள முடியுமென்ற நிலைக்கு, பி.ஜே.பி. மேலிடம் வந்துள்ளது.
டி.டி.வி. தினகரனையும், செங்கோட்டையனையும் முன்னிறுத்தி, தி.மு.க. –அ.ம.மு.க. இணைப்பு என்ற திட்டத்தை டெல்லி முன்வைத்தது. அதற்கு, முதலில் சம்மதித்த தினகரன், பிறகு மறுத்துவிட்டார். அவரின் எதிர்பார்ப்பு, எடப்பாடியை நீக்கிவிட்டு, தன்னை முதல்வராக்க வேண்டும் என்பதுதான். இதைக்கேட்டுக் கடுப்பான எடப்பாடி, வேறு திசையில் காய் நகர்த்த ஆரம்பித்தார். அதையடுத்து, எடப்பாடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி, பரோலில் சென்னை வந்திருந்த இளவரசியை ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளார்.
சசிகலாவை கட்சியை விட்டு நீக்கவேண்டும்' என்று டெல்லிதரப்பில் கடுமையான அழுத்தம் கொடுத்தபோதும், ஓ.பன்னீர்செல்வம் நச்சரித்தபோதும், எடப்பாடி அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. சசிகலாவை எதிர்த்து அவர் இதுவரை ஏதும் செய்யவுமில்லை. இவற்றையெல்லாம் இளவரசியிடம் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் தூது சென்ற பெண்மணி. பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குச் சென்ற இளவரசி, கட்சியின் நிலவரம் குறித்து பல விஷயங்களை சசிகலாவிடம் பேசியிருக்கிறார். அவைதான், இப்போது நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது. அதன்படி, `அ.ம.மு.க. என்கிற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்த தினகரன் தனித்துவிடப்படுவார். அவரது கோஷ்டியில் இருப்பவர்கள் அனைவரும் அ.தி.மு.க.வுக்குத் திரும்பவேண்டும்' என்று தூதுவர்கள் சந்தித்துப் பேசி வருகிறார்கள். அவர்களுடன் சேர்த்து, ஒரு எம்.எல்.ஏ. என்கிற வகையில் தினகரனும் கட்சியைக் கலைத்துவிட்டு அ.தி.மு.க-வுக்கு வரலாம். அல்லது, வராமல் இருக்கலாம். சசிகலா ஆலோசனையின்பேரில், தினகரனுக்கு உரிய மரியாதை தரப்படும்' என்று தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தினகரன் `நோ’ சொல்லி விட்டதாகத் தகவல்.
