'நல்லாட்சி என்ற பதம் அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது. இந்த சொல்லிற்கு மிகவும் பொருத்தமானது தளமாக கூட்டுறவு சங்கங்கள் திகழ்கின்றது.'என கூட்டுறவு சங்கங்களை 2019இல் சிறந்த நிலைக்கு நாம் கொண்டு செல்ல முயற்சிக்கவேண்டும் என திருகோணமலை மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன் தெரிவித்தார்.
நேற்று காலை10.00மணியளவில் திருகோணமலை மாவட்ட கூட்டுறவு சபையில் அதன்தலைவர் க.சதானந்தம் அவர்களின்வரவேற்புரையுடன் நடந்த நல்லாட்சி தொடர்பான செயலமர்வில் அவர் கருத்துவெளியட்டார்.இங்கு மேலும் இவ்வாறு கருத்துதெரிவித்தார்
சிறந்த முறையில் செயற்படும் கூட்டுறவுச்சங்களை நாம் ஊக்குவிக்க பின் நிற்க மாட்டோம். அவ்வாறான சங்கங்களுக்கு அரச மற்றும் பொது அமைப்புக்களின் பங்களிப்புக்களை பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளன.குறிப்பாக நிதி ,கடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைளை செய்யக்கூடிய வசதி வாய்ப்புக்கள் கூட்டுறுவுச்சங்கங்களுக்கே அதிகம் உள்ளன.
பல இடங்களில் இவ்வாறான சங்கங்கள் பல தொழில் திட்டங்களை முன்னெடுக்கின்றன.
பல இடங்களில் சங்கங்கள் இயக்கமின்றி முடங்கியும் உள்ளன. இவ்வாறு இயங்காத சங்கங்களையும் நாம் இயங்;கவைக்க வேண்டும்.
இவை இயங்குவதாக விருந்தால் சங்கங்களிற்கிடையில் நல்லாட்சி சூழல் நிலவவேண்டும்.
கடந்த 3 வருடங்களாக நல்லாட்சி நாட்டில் நிலவியதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த நல்லாட்சியை தரக்கூடிய சிறந்த அமைப்பாக கூட்டுறவுச்சங்கங்கள் திகழ்கின்றன. இதனை நாம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தினார்.
இங்குபேசிய தலமைக்கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி நசீர் குறிப்பிடுகையில் , சங்கம் முறையாக கூட்டங்களை நடாத்துதல் வேண்டும். அதன்மூலம் தீர்மானங்களையும் தகவல்களையும் அடிக்கடி பகிர்ந்து கொள்ளவேண்டும் அதன்மூலம் நல்லாட்சியின் முக்கிய விடயமான வெளிப்படைத்தன்மையை பேணமுடியும். பரஸ்பரம் நிருவாகிகள் தமது சங்கத்தின் சகல நடவடிக்கைளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைக்கூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி எல்.எம்.நசீர். முன்னால் தலைமைகூட்டுறவு அபிவிருத்தி அதிகாரி மு.ஆனந்தராஜா அபிவிருத்தி அதிகாரி க.பிரபாகரன் அகம் நிறுவனத்தின் மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.இந்நகிழ்வில் மாவட்ட கூட்டுறவுச்சபையில் அங்கம் வகிக்கும் கூட்டுறவு அமைப்பு நிருவாகிகள் கலந்துகொண்டனர்
அ . அச்சுதன்





