
இத்திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாகசைதன்யா மற்றும் தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம், ‘100 சதவீதம் லவ்’. இந்த திரைப்படம் ‘100 சதவீதம் காதல்’ என்ற பெயரில் தமிழில் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். நாசர், தம்பிராமையா, ‘தலைவாசல்’ விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்த திரைப்படமாக உருவாக்கிருக்கிறார்கள்.
