முடிந்தால், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாளைய தினம் நாடாளுமன்றத்திற்கு வரவழைத்து காட்டுமாறு சவால் விடுப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டங்களில் ஆளும்கட்சியை சேர்ந்த 86 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், நிதியமைச்சர் என்ற வகையில் மகிந்த ராஜபக்ச கொண்டு வரும் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது எனவும் அது தோல்வியடையும் எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
(கிண்ணியா செய்தியாளர்)
