
ரொறன்ரோ டவுன்ரவுன் மத்திய பகுதியில் பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் அந்த வாகத்தை கைப்பறியுள்ளதாகவும், அது தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Church street மற்றும் Shuter street பகுதியில் திருடப்பட்ட வாகனம் ஒன்றினை இனங்கண்ட சுற்றுக்காவல் அதிகாரிகள், அதனை துரத்திச் சென்ற போதே அந்த வாகனம் பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின் போது திருடப்பட்ட அந்த வாகனத்தை செலுத்திச் செலுத்திச் சென்ற நபரும், பாதசாரி ஒருவரும் காயமடைந்ததாகவும், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தை திருடிச் சென்றதாக கூறப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், அவர்கள் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விபரங்கள் எவையும் வெளியிடப்படவிலலை.
