
நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் கல்கரி நகருக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (வியாழக்கிழமை) இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில் பிரதமர் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நிகழ்வு இடம்பெற்ற அரங்கின் வெளியே எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கனடாவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் தபால் ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையிலான மத்திய அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
