LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 27, 2018

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி


ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதற்கிடையே, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும், தொழிற்சாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமைத் தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தற்போது, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை  பின்னனி

ஸ்டெர்லைட் ஆலை அல்லது ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் (Sterlite Industries) எனப்படுவது, இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில்  அமைந்துள்ள ஒரு தொழிற்சாலை ஆகும்.

இது சுரங்கத்தொழில் மற்றும் உலோகங்களில் உலகளவில் ஈடுபடும் வேதாந்த ரிசோர்செசு நிறுவனத்தின் அமைப்பாகும். 1991–1996 வரையிலான, திரு.நரசிம்மராவ் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி காலத்தில், செம்பு உருக்கும் தொழிற்சாலைக்காக 1993ல் அடிக்கல் நாட்டப்பட்டது.

இங்கு செம்பு கம்பி மற்றும்கந்தக அமிலம்  பாஸ்பரிக் அமிலம் ஆகியன உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி பெரும் கேடினை ஏற்படுத்தும் என்பதால் ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக்கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வந்தனர்.
ஆலையில் இருந்து விசவாயு கசிவு ஏற்பட்டதால் அதை சுற்றி இருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சுற்றுச்சூழக் பாதுகாப்பு  கருதி ஆலையை மூட மாசுக்கட்டுப்பாட்டுவாரியம்  உத்தரவிட்டது.

இந்த நிறுவனத்திலிருந்து இதுவரை 82 முறை விஷவாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு குற்றம் சாட்டியது.
அதன்படி , அப்போதைய தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் (16 May 2011 – 27 September 2014) ஆட்சிக்காலத்தில் , மார்ச் 30, 2013 அன்று ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆலைக்கு சென்று சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பல போரட்டங்கள் அதன்பின்னர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் பின்னர் இந்த ஆண்டில் தொழில்சாலை மூடப்பட்டது.






 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7