விழிப்பு நிலை
எனது உடலை கனவு
அணியத் துவங்குகிறது
அது இரவு முடியவே
முடியாதோ என்கினறது போல்
நீண்டு செல்கிற நேரம்
கைபிடியளவு கனவை
வளர்த்தெடுக்கிறேன்
தலையணையின் தூரத்திலிருந்து
அது அறையின் இருள் முழுவதுமாய்
என்னைப் பிரதியெடுக்கிறது
எனினும்
கனவில்தான் நானே வாழ்கிறேனா
என்று சந்தேகம் இருக்கிறது
இருட்டின் ருசி
விழித்திருக்கும் இரவு
இன்னும் மீதமிருக்கிறது
இரவு எப்போதும்
இருப்பதைப் போல் அல்ல
புதிய பக்கங்கள்
பேச்சுக்கு ஆள் கிடைத்ததைப் போல்
கனவு இடையாறாது
வளர்ந்து வருகிறது
விழிப்பு தட்டிவிட்டது
ஆனாலும்
இந்த விழிப்பு நிலை
ஒரு கனவு போல் வளரத் துவங்குகிறது.
_ ஏ.நஸ்புள்ளாஹ்
