(ரமேஸ்)

இதன் போது சினிமாத்துறையில் மட்டுமன்றி, நாடகத்துறையிலும் சிறந்து விளங்கிய கறுவாக்கேணியை சேர்ந்த கலைஞர்.நல்லதம்பி சுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் மற்றும், நினைவுச்சின்னம் என்பவற்றுடன், பொன்னாடை அணிவித்தும் கெளரவிக்கப்பட்டார். 'ஒரே நாளில்' எனும் நாடகம் 'வட்டிலக்கம் 303' என்ற திரைப்படம் ஆகியவற்றில் தனது நடிப்பாற்றல் மூலம் கலைத்துவத்தை வெளிப்படுத்தியமைக்காக இவர் கெளரவிக்கப்பட்டார். மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கலைஞர்கள் கெளரவிப்பு நிகழ்விலும் இவர் சிறந்த கலைஞருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தார்.
