
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலைசேனை பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வந்த அடை மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். நிவாஸ் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக முஸ்லிம் கேன்ட்ஸ் அமைப்பின் பணிப்பாளர் ஏ.எம்.மிஃளார் அவர்களினால் உலர் உணவு நிவராணப் பொருட்கள் (21-11-2018)அன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது .
சுமார் 500 குடும்பங்களுக்குஉலர் உணவுப் பொதிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில்
கிண்ணியா பொலிஸ் நிலைய பொருப்பாதிகாரி கபில காலகே, முஸ்லிம் கேன்ஸ் அமைப்பின் ஒருங்கமைப்பாளர் எம்.கே. இல்முதீன் , கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரிய சங்கத்தின் தலைவர் சலாம் அனீஸ், சமூக ஆர்வலர் யாகூப் பைசல் உப்பட பலர் கலந்து கொண்டனர்.
(அச்சுதன்)