ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்ராறியோவின் மாகாண அரசாங்கம் பதவியேற்று 129 நாட்களே ஆன நிலையிலேயே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும், அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர வேறு எந்த விபரங்களையும் முதல்வர் டக் போர்ட் அலுவலகம் வெளியிடவில்லை.
அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் வெளியான சில தகவல்களில், அமைச்சர்கள் சிலர் இந்த அமைச்சரவை மீளமைப்பில் தொடர்பு படுவதாக கூறப்படுகிறது.
எனினும், தமிழ் மாகாணசபை உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமா என்ற தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.





