LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

சபரிமலை விவகாரம் அமித் ஷா பதிவும் பினராயி விஜயன் பதிலடியும்

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள மாநில இடதுசாரி அரசின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிப்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிறைக் கைதிகளைப் போல நடத்தப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை பக்தர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 69 பேரை போலீஸார் கைது செய்தனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸாரால் கைது செய்யப்படுவது ஐயப்பன் கோயில் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திட்டமிட்டே இதுபோன்ற போராட்டங்களைத் தூண்டிவிடுவதாக கேரள மாநில இடதுசாரி கூட்டணி அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதுமே பதற்றமான சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில்,

இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பதிவிட்டுள்ளார். அதில், ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும், விலங்குகளின் கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளிலும் தங்க வேண்டிய அவல நிலை உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஐயப்ப பக்தர்களை குலாக் ( சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இருந்த கட்டாயத் தொழிலாளர்கள் சிறை) கைதிகளைப் போல நடத்த முடியாது என்பதை கேரள முதல்வர் பினராயி விஜயன் உணர வேண்டும். மக்களின் நம்பிக்கையையும், பக்தியையும் சிதைக்கும் முயற்சியில் கேரள அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு எதிராகவும், பக்தர்களை சங்கடப்படுத்தும் நோக்குடனும் கேரள மாநில இடதுசாரி அரசு எடுக்கும் நடவடிக்கைகளை பாஜக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் பாஜக ஐயப்ப பக்தர்களுக்கு துணைநிற்கும் என்று அமித் ஷா கூறியுள்ளார்.


இதற்கு  கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்து பதிவிட்ட பதிவில் .

சங் பரிவாரங்கள் சொல்வதைக் கேட்டு பிரச்சினைகளை அமித் ஷா திசை திருப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பினராயி விஜயன் பதிவு செய்த ட்வீட்களில்,

"சபரிமலை பிரச்சினையில் அமித் ஷா பதிவு செய்துள்ள ட்வீட்கள் ஆதாரமற்றவை. திசைதிருப்பும் தொனியில் உள்ளன எனவும் சபரிமலை புனித யாத்திரை சுமுகமாகச் சென்று கொண்டிருக்கிறது. பக்தர்கள் அரசின் முன்னேற்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். அரசின் ஏற்பாடுகள் மீது குறை சொல்பவர்கள் எல்லோருமே சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்களே. அவர்களின் நோக்கம் பிரச்சினை ஏற்பட வேண்டும் என்பதுதான்.

அவர்கள் முன்னெடுத்த பிரச்சாரத்தால் அமித் ஷா தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளை அமல்படுத்துவதைத் தவிர வேறு வழி அரசுக்கு இல்லை எனக் கூறியுள்ளார். அமித் ஷாவின் குற்றச்சாட்டுகளுக்கு இதுவே தகுந்த பதில்.
மேலும், மனித உரிமை ஆணையமும் இந்த ஆண்டு சபரிமலை புனித யாத்திரையில் எவ்வித பெரிய பிரச்சினையும் புலப்படவில்லை என்றே கூறியிருக்கிறது" என பதில் தெரிவித்துள்ளார்.
Attachments area



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7