LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, November 21, 2018

தெலுங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் ’சந்திரமுகி’ எனும் 32 வயது திருநங்கை தேர்தலில் போட்டி.

தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7-ம் தேதி நடைபெறவுள்ளது. தெலங்கானா மாநில தேர்தலில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் பாஜக- காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள் ளார்.

மார்க்ஸிஸ்ட்-பகுஜன் (இடது) கூட்டணி கட்சிகளில், பகுஜன் (இடது) கட்சி சார்பில் சந்திரமுகி (32) எனும் திருநங்கை, ஹைதராபாத்தில் உள்ள கோஷாமஹல் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் கடந்த இரு வருடங்களுக்கு முன்னால்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேவி என்கிற திருநங்கையை நாம் தமிழர் கட்சி 2016ம் ஆண்டு வேட்பாளராக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதனை விடவும்

“வீடுகளில் புறக்கணிக்கப்பட்டும், வேலைவாய்ப்பும் நிராகரிக்கப்பட்ட நிலையில் கைவிடப்படும் திருநங்கைகள், பிச்சை எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதை குற்றச்செயலாகக் கருதக் கூடாது. அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியதாக அரசு இருக்க வேண்டும்"
என்று யதார்தமான கருத்தை கூறியவர் இந்த தேவி ஆவார்.

இவர் சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் 2016-ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியாவில் திருநங்கைகள் உரிமைகள் பெரும் கேள்விக்குறியே..

சில வருடங்களுக்கு முன்னர் திருநங்கைகள் பாதுகாப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த மசோதாவை, மக்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ரமேஷ் பயஸ் தலைமையிலான மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.

கடந்த ஆண்டில் மூன்று முறையும் இந்த ஆண்டில் இரு முறையும் கூடி மசோதாவை ஆய்வு செய்த நிலைக் குழு, தனது அறிக்கையை அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

நிலைக்குழுவின் கவலைகள்
அதில் வீதிகளில் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கும் திருநங்கைகளின் செயலை குற்றமாகக் கருதும் அம்சங்களை, மசோதா கொண்டுள்ளதாக நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது.


திருநங்கைகள் வசிப்பதற்கு நிரந்தரமான வீடு, வேலைவாய்ப்பு ஆகியவை உறுதிபடுத்தப்பட்டால் அவர்கள் அடிக்கடி இடம் மாறுவதும், தங்களின் வாழ்வாதாரத்துக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கும் தள்ளப்பட மாட்டார்கள்
என்ற உண்மையோடு

பொது கழிவறைகள், அரசு மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் போன்ற இடங்களில் திருநங்கைகளுக்காக தனி கழிவறைகள், விண்ணப்ப படிவங்களில் ஆண், பெண் பாலினம் போல "திருநங்கைகள்" என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தனியாக பாலின குறியீடு நிரப்பும் பகுதி இருக்க வேண்டும் என்பதே அவர்களும் சமூக அரசியல் அதிகாரத்தில் பங்களித்து பயணிக்க ஏதுவான யதார்த்தம் ஆகும்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7