
ஜி-20 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்கான ஆர்ஜன்டீன ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சீன ஜனாதிபதி இன்று (செவ்வாய்க்கிழமை) புறப்பட்டு சென்றுள்ளார்.
இதேவேளை, ஸ்பெயின், பனாமா மற்றும் போர்த்துக்கல் ஆகிய நாடுகளுக்கும் சீன ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த நாடுகளுக்கான சீன ஜனாதிபதியின் விஜயத்தில், அவரது பாரியார் பெங் லியுன் உள்ளிட்ட அரசியல் பிரிவு உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
சீன ஜனாதிபதியின் இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
