——— நமசிவாய வாழ்க ———
சவால்கள் நிறைந்த வாழ்க்கையை சாகும் வரை மனிதன் சந்தித்தே ஆகவேண்டும்.
இயற்கையின் சவால்களை எதிர்கொள்ள சமயோசித புத்தியும் எம் செயல்களால் வரும் சவால்களை சமாளிக்க சரியான திட்டமிடலும் இருந்தால் வரும் சவால்களை ஒரளவு வென்றுவிடலாம்.
ஆனாலும்
விதிவழிகளினாலும் கடந்தகால பிறப்பின் கர்மபலன்களினாலும் வரும் சவால்களை சந்திக்க இறவன் ஈசன் துணையின்றி எந்த தீர்க்கதரிசியாலும் அறிந்து புரிய வைக்க முடியாது அதே போல எந்த மனிதக்குருக்களினாலும் மாற்றி அமைக்கவும் முடியாது.
விஞ்ஞானிக்கும் விளங்காத விடயங்களும் வைத்தியனுக்கு புரியாத சூட்சமங்களும் இந்த வையகத்தில் நிறயவே உள்ளன. இதனை ஆண்டவன் ஒருவனே நன்கு அறிவான்.
ஆகையால் ஆதியும் அந்தமும் இல்லா அந்த நாயகனாகிய ஆடல்கடவுள் மேல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். வாழ்கையில் வரும் ஆட்டங்களை அவனே உங்கள் சார்பில் பார்துக்கொள்வான்.
தோஷங்களும் சோகங்களும் விலகிச்சென்று வாழ்கையில் சந்தோசங்களும் சம்பூரணங்களும் நிரம்பி வழிந்து பொழியட்டும். வாழ்க்கை என்றும் பொங்கி பொலிவாகட்டும்...
சங்கரன் ஜெய சங்கரன்❤️
சிவனடியான்🙏
