(சோ.ஜெகதீஸ்வரன்)
நிலையத்தின் பிரதான அரங்கில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்றதன் பின்னர் கலை, கலாசார பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றது.
கல்குடா வலயக்கல்வி அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் நிருவாகத்திற்கான பிரதிக்கல்விப்பணிப்பாளருமான திருமதி.அபூபக்கர் றிஸ்மியா பாணு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் தருமரெத்தினம் அனந்தரூபன் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியதுடன் கலை, கலாசார நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்குகொண்டது உத்தியோகத்தர்களை ஊக்குவித்ததுடன் முன்மாதியாகவும் அமைந்ததாக நலன்புரிச் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நிகழ்வுகளாக யானைக்கு கண் வைத்தல், மட்டை இழைத்தல், தேங்காய் துருவுதல், பொத்தலில் நீர் நிரப்புதல், சிறுவர்களுக்கான தொப்பி மாற்றுதல்,ஆண் பெண் இருபாலாருக்குமான கயிறு இழுத்தல், பாடல், ஆடல் என சுவாரஸ்யமான பல கலாசார நிகழ்வுகள் நடந்தேறியது.
குறித்த நிகழ்வில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான என்.நேசகஜேந்திரன் மற்றும் எஸ்.தயாளசீலன், த.இதயகுமார் மற்றும் தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் குடும்ப சகிதம் கலந்து கொண்டனர். தமிழ் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கலை, கலாசார, விளையாட்டு நிகழ்வுகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டது இன நல்லிணக்கத்திற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளது என சிரேஸ்ட்ட உத்தியோகத்தர்கள் சிலாகித்து உரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.