மட்டக்களப்பு பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தமது கடமைகளை இன்று (18) பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடந்த மூன்று வருடங்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் இன்று முதல் மட்டக்களப்பு பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக சுகாதார திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் அவர்களை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் வைத்திய அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் வரவேற்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.