வெலிசறை தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்று நோயாளி மருதானை பொலிஸ் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மேலும் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, மருதானை பிரதேசத்தின் போலியான முகவரி ஒன்றை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், மருதானை பிரதேசத்தில் குறித்த முகவரியில் அவ்வாறான நபர் ஒருவர் வசிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குறித்த நபர் கிரேண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.