இயற்கை வளங்களை பாதுகாக்கவும், அதனை முறையாக நிர்வகிக்கவும் இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நிலையான அபிவிருத்திக்கான பல்லுயிர் தொடர்பான அவசர நடவடிக்கை என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கையில் இரண்டு யுனெஸ்கோ இயற்கை பாரம்பரிய தளங்கள் உள்ளன அதில் மத்திய மழைக்காடு மற்றும் சிங்கராஜா மழைக்காடுகள் அடங்குவதாக சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு தனித்துவமான மற்றும் வளமான பல்லுயிர்களுக்கு பங்களிப்பு செய்யும் இந்த இயற்கை சொத்துக்களை பாதுகாக்கவும், நிலையான முறையில் நிர்வகிக்கவும் இலங்கை உறுதிபூண்டுள்ளது என கூறினார்.
உலகளவில் பல்லுயிர் பெருக்கத்தில் சரிவு காணப்பட்ட போதிலும், சமீபத்திய தசாப்தங்களில், பல்லுயிர் தொடர்பான மாநாட்டின் மிகைப்படுத்தப்பட்ட உணர்வை நிலைநிறுத்த இலங்கை உறுதியளித்துள்ளது என கூறினார்.
அத்தோடு இயற்கைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவிலும் சமகால உலகளாவிய சுற்றுச்சூழல் நிர்வாகத்திலும் மாற்றத்திற்கான முக்கிய தேவை உள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பண்டைய ஆட்சியாளர் ஒருபோதும் நிலத்தின் உரிமையாளர் அல்ல என்ற கருத்தின் அடிப்படையில் வெறுமனே நாட்டு மக்களே அனைத்து உயிரினங்களின் சார்பாக அதன் பராமரிப்பாளராக இருக்கிறார்கள் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.