(J.JAISHIKKAN)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோணா வைரஸ் பரவலினைத் தடுப்பதற்காக பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் விசேட விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் அம்கோர் நிறுவனத்தின் தன்னார்வு தொண்டுப் பணிகளில் ஈடுபட்டுவரும் தொண்டர்களின் பங்களிப்புடன் இன்று (22) மட்டக்களப்பு நகர்புரத்தின் ஐந்து இடங்களில் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களான பஸ்தரிப்பு நிலையம் மற்றும் அதனை அண்டிய வர்த்தக நிலையங்கள், ஊரணி சந்தி, அரசடி சுற்றுவட்டம், எரிடிபாருள் கூட்டுத்தாபன சந்தி மற்றும் தன்னாமுனை ஆகிய தெரிவு செய்யப்பட்ட ஐந்து இடங்களிலும் இவ்விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரச மற்றும் தனியார் போக்குவரத்து சாதனங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனைய வாகனங்களில் பயணிக்கும் மக்கள், பொருட்கள் கொள்வனவு செய்யவரும் மக்கள் முகக் கவசத்தினை முறையாக அணிவதற்கு அறிவூட்டப்பட்டனர். மேலும் முகக் கவசம் அணியாதவர்களுக்கு இரானுவத்தினரால் இலவலசமாக முகக்கவசம் வழங்கப்பட்டதுடன் எச்சரிக்கையும் செய்யப்பட்டது.
பொலிஸ் மற்றும் இரானுவம் இணைந்து மேற்கொண்ட இவ்விசேட விழிப்பூட்டல் நிகழ்விற்கு மட்டக்களபு மாவட்டத்தின் கிராம சேவகர் பிரிவுகளில் தொண்டுப் பணியில் ஈடுபட்டுவரும் அம்கோர் அமைப்பின் தொண்டர்கள் இணைந்து பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.