LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, October 18, 2020

ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும்- அரசாங்க தரப்பில் வலியுறுத்து!


 ரிஷாட் பதியுதீன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா கோரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியா, டயகமவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

அவர் தெரிவிக்கையில், “ ரிஷாட் பதியுதீன் விவகாரம் தொடர்பான விசாரணைப் பொறிமுறைமீது எமக்கும் பலத்த சந்தேகம் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் அறிக்கை கையளித்துள்ளோம். நீதி கிடைக்கும் என நம்புகிறோம்.

நீதித்துறையில் நாம் தலையிடவில்லை. எவருடனும் அரசியல் டீலும் இல்லை. நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் உள்ளன.

அதேவேளை, ரிஷாட் பதியுதீன் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்பதே எமது கோரிக்கையும். ரவூப் ஹக்கீமும் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார். எனவே, தலைமறைவாகாமல் சரணடையுமாறு வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறிய பின்னர் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும் என சிலர் கூறுகின்றனர்.

உண்மை அதுவல்ல, நாட்டில் இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவியை வகித்தவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விடவும் குறைந்தளவான அதிகாரங்களே ’20’ ஊடாக ஜனாதிபதிக்குக் கிடைக்கும். உயர் நீதிமன்றத்தின் சட்ட வியாக்கியானம் வெளியான பின்னர் இது தெரியவரும்.

நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் அமோக ஆணையை வழங்கினர். அவ்வாறு சேவையாற்றுவதற்கு ’19’ தடையாக உள்ளது. அது நீக்கப்படும் என்ற உறுதிமொழியை மக்களுக்கு வழங்கியிருந்தோம். இதற்கு மக்களும் வாக்குரிமைமூலம் அனுமதி வழங்கினர். எனவே, கட்டாயம் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7