பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த விசேட நிபுணர்கள் இன்று காலை இலங்கைக்கு வருகைதந்த நிலையில், கல்முனைக்கு சென்றுள்ள அவர்கள், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கடற்படையின் யுத்தக் கப்பல் ஒன்றின் மூலம் தீப்பற்றிய கப்பலை நோக்கிச் சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பலில் இருந்து எண்ணைக் கசிவு ஏற்பட்டால் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பாதுகாப்புத் திணைக்களத்தின் 20 பொறியியலாளர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.
மேலும், இவ்வாறு மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த நிபுணர்கள் குழுவில் இரு பெண்களும் உள்ளடங்குகின்றனர்.