UPDATE 02: இலங்கையில், மேலும் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 822ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்த இதுவரை இரண்டாயிரத்து 514 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 297 பேர் வைத்தியாசலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
————————————————————————————————————————————————————————————————————————————–
UPDATE 01: இலங்கையில், மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 817ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர் லங்காபுர பகுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவருடன் நெருங்கிப் பழகியவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்த இதுவரை இரண்டாயிரத்து 514 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் 292 பேர் வைத்தியாசலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை 11பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.