நாட்டில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,828 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை மொத்த 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய 04 பேரும் லங்காபுர நோயாளியுடன் தொடர்புடைய ஒருவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இன்று 03 பேர் குணமடைந்திருந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2517 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 300 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அத்தோடு 50 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.