தலைநகர் ஓட்டாவா முழுவதும் உள்ளரங்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் வேரா எட்செஸின் உத்தரவின் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
கட்டாயமாக முகக்கவசம் கொள்கையை அறிமுகப்படுத்த சுகாதார பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு சட்டத்தின் கீழ் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.
வழங்கப்பட்ட விலக்குகளுக்கான காரணத்திற்காக எந்தவொரு நபரும் ஆதாரம் வழங்கத் தேவையில்லை என்றும் உத்தரவு கூறுகிறது.