(ஜெ.ஜெய்ஷிகன்)
அதன் தொடர்ச்சியாக சமூகசேவைத் திணைக்களத்தின் கீழியங்கும் சமூக பராமரிப்பு நிலையங்களில் தென்னங்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கறுவாக்கேணி சமூகபராமரிப்பு நிலையத்தில் தென்னங்கன்றுகள் நடும் நிகழ்வு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்றது.குறித்த நிகழ்வில் பதில் சமூகசேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.யோகராசா சுதர்சினி, உள்ளிட்ட அலுவலக குழாத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், கண்ணகிபுரம் முதியோர் சங்கம், பிரதேச செயலக வளாகம் கமூக பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட பல இடங்களிலும் குறித்த மரநடுகை நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.