LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, July 29, 2020

யாழில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பாக யாழ். போதனா பணிப்பாளர் வெளியிட்ட கருத்து

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25 ஆம் திகதி 2 ஆவது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7 ஆம் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருடன் பழகிய வைத்தியசாலை ஊழியர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், குறித்த ஒல்லியார்களுக்கு 31 ஆம் திகதி மீண்டும் பாிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 7ம் திகதி சவுதி அரேபியாவில் இருந்து வந்த 208 பேருடன் தங்கியிருந்தவர் 22ம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் மாலையே 7 ஆம் விடுதியில் உள்ள தனிமைப்படுத்தல் அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை வழங்கப்பட்டு மீண்டும் விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பபட்டார்.
மீண்டும் 25ம் திகதி சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கமைய நேற்று மாலை நடத்தப்பட்ட பி.சி.ஆா் பாிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
எனினும் அவருக்கு தொற்று குறைந்தளவிலேயே உள்ளது. இதற்கமைய யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணா்கள் குழு கூடி ஆழமாக இந்த விடயத்தை ஆராய்ந்துள்ளது.
அத்துடன் குறித்த நபர் வைத்தியசாலையில் தங்கியிருந்த காலப்பகுதியில் வேறு யாருடனும் நேரடியாக தொடா்புகளை பேணினாரா? என்பதை ஆராய்ந்துள்ளோம். இதற்கமைய குறித்த நபர் தங்கியிருந்த விடுதியிலும், தனிமைப்படுத்தல் விடுதியிலு் பணியாற்றிய 4 உத்தியோகத்தா்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதற்கான குறைந்தளவு சந்தர்ப்பம் உள்ளதென்ற அடிப்படையில் அவா்கள் அவா்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவா்களுக்கான பாிசோதனைகள் எதிா்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ளது. மேலும் அவர்கள் சமூக இடைவெளியினையும் பேணியிருக்கின்றனர்.
ஆகவே யாழ்.போதனா வைத்திசாலையில் உள்ள மற்றவர்களுக்கோ, ஊழியா்களுக்கோ தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இந்த நோய் பரவும் வேறும் தீவிரமானது என்பதால் நாம் மிக அவதானமாக உள்ளோம்” என கூறினார்.

14Shares


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7