மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான வரம்புகளை, ஒன்றாரியோ மாகாணம் தளர்த்தியுள்ளது.
பெரும்பாலான கனேடிய மாகாணங்கள் இப்போது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்ற நிலையில், ஒன்றாரியோ மாகாணமும் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
முடக்கநிலை காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய மருந்துகளின் அளவு 30 நாட்கள் வரம்பை கொண்டிருந்தது.
ஆனால், தற்போது வழக்கமான 90 அல்லது 100 நாட்களுக்கான மருந்துகளை ஒன்றாரியோர்கள் மீண்டும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.