UPDATE 06 இலங்கையில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது.
இன்றுமட்டும் 96 பேர் புதிய நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் வைத்தியசாலைகளில் 556 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
UPDATE 05 கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,209 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட 24 பேரில் 19 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் 5 பேர் கடற்படையினர் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
UPDATE 04 கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
UPDATE 03 நாட்டில் இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,201 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 19 பேரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 479 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
UPDATE 02 கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,199 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போது தொற்று உறுதியானவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
UPDATE 01 கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,189 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 07 பெரும் குவைத்தில் இருந்து நாடுதிரும்பியவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 467 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்தோடு இன்றுமட்டும் 17 பேர் பூரண சுகமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.