இலங்கையில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 981ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 538 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொடர்ந்து 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 9 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தொற்றுக்குள்ளானோர் மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை மொத்தமாக 970ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் தொற்று உள்ளதாக தற்போது அடையாளம் காணப்பட்ட 6 பேரும் கடற்படையினர் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று- இருவர் லண்டனில் இருந்து வந்தவர்கள்!
இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 964ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்ட நால்வரில் இருவர் லண்டனில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் என்றும் ஏனைய இருவரும் கடற்படையினர் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு இலக்காகியவர்களில் இன்று 18 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.