LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, May 11, 2020

இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு!

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவதற்கு அளிக்கப்படும்
நன்கொடைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம் 80-ஜி(2),(பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இராமர் கோயில் கட்டுவதற்கு பெரிய கம்பனிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற வழிவகை ஏற்பட்டிருப்பதாகவும் நன்கொடைத் தொகைக்கு வருமான வரிச் சட்டத்தின்கீழ் வரி விலக்கு கிடைக்கும் என்றும் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இதற்காக ‘இராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா’ என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

இந்த அறக்கட்டளை, கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. அத்துடன் அறக்கட்டளை, தனது புதிய அடையாளச் சின்னத்தை அனுமார் ஜெயந்தி தினமான கடந்த மாதம் 8ஆம் திகதி வெளியிட்டது.

இதேவேளை, கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதம் 30ஆம் திகதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அடிக்கல் நாட்டு விழா பிற்போடப்பட்டது.

கோயில் கட்டுவதற்காக பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறுவதற்காக அறக்கட்டளையின் சார்பில் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நன்கொடையாக 11 இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், அயோத்தியில் கட்டப்படவுள்ள இராமர் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்கள் வந்து வணங்கும் இடம் என்பதால் கோயில் கட்டுவதற்காக வழங்கப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7