முன்னதாக பிசி ஹவுசிங் மற்றும் கூட்டாளர் அமைப்புகளுக்கு மே 9ஆம் திகதிக்கான காலக்கெடுவிற்குள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை அகற்ற வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஆனால், அவர்களை வெளியேற்றுவதற்கான காலக்கெடுவானது தற்போது மே 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 250 வீடற்ற மக்கள் டோபாஸ் பார்க்கிலும், பண்டோரா அவென்யூவிலும் தங்கியுள்ளனர் என பிரிட்டிஷ் கொலம்பியாவின் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷேன் சிம்ப்சன் தெரிவித்துள்ளார்.