ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.