முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தலைமையிலான குழுவினரால் மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கொழும்பிலுள்ள பல்வேறு பிரதேசங்களில் மக்களின் குறைநிறைகளை நேரடியாகச் சென்று மனோகணேசன் கேட்டறிந்து கொண்டார். அந்தவகையில், இதுவரை 9 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான ஏற்பாட்டை ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும் ஜனனம் அமைப்பின் தலைவருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி மேற்கொண்டதுடன் மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்த நிவாரணப் பணியில் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதுடன் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கப்படும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.