மாவட்டத்தின் கரையோர பகுதிகள் அனைத்திலும் கடல் நீர் உற்புகுந்ததால் மீனவர்களது படகுகள் கடற்கரையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டள்ளதுடன் படகுகளை காப்பாற்றுவதற்காக எடுத்த முயற்சியில் பல படகுகள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இன்றுடன் ஐந்தாவது நாளாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர். இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 25000க்கும் அதிகமான மீனவர்கள் தமது வாழ்வாதாரததை இழந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கொரொனா வைரஸ் தொற்று காரணமாக மீனவர்களின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படாத காரணத்தால் மீன் விலை குறைவடைந்துள்ளது. இதனால் மீனவர்களின் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த புயல் அச்சுருத்தல் காரணமாக கடற்றொழில் முழுமையாக தடை செய்யப்பட்டள்ளமை மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.
அத்துடன் மீனவப்படகுகளுக்கான காப்புறுதிக்கு வருடத்திற்கு 2500ரூபா அறவிடப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் தமது படகுகள் முற்றாக சேதமடைந்தால் மாத்திரமே தமக்காண இழப்பீடுகள் வழங்கப்படுவதாகவும் சேதங்களுக்கு அவை வழங்கப்படுவதில்லை என தெரிவித்தனர்
வாகணங்களுக்கு ஏற்படும் சிறு கீறல்களுக்கு கூட காப்புறுதி நிறுவனங்களால் அதனை திருத்துவதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றது எனினும் இக் காலப்பகுதியில் போதிய வருமானம் இன்மையால் சேதமடைந்த தம் படகுகளை திருத்தமுடியாமல் இன்னல்ப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்
எனவே அரசு இவர்களின் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் திருகோணமலை மாவட்ட மீனவ சமுதாயமும் கோரிக்கை விடுக்கின்றது.எனவே அரசு இவர்களின் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.