நகரத்தின் குடிநீர் குடிக்க பாதுகாப்பானதா என்பது தெரியவில்லை என்பதால், பாதுகாப்பாகக் கருதும் வரை தங்கள் தண்ணீரைக் கொதிக்க வைத்து பருகுமாறு தெற்கு ஆல்பர்ட்டா நகர குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்வரும் ஏதேனும் காரணங்களுக்காக நீரை பயன்படுத்துவதற்கு முன்பு டவுன் ஆஃப் கிராஸ்ஃபீல்ட் நீர்வழங்கலில் இருந்து தங்கள் குடிநீரைப் பெறும் ஒவ்வொருவரும் மேலதிக அறிவிப்பு வரும் வரை தங்கள் தண்ணீரைக் கொதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிப்பது, ஜூஸ் தயாரித்தல், பல் துலக்குதல், உணவு தயாரித்தல், ஜஸ் கட்டி தயாரித்தல் போன்ற காரணங்களுக்கு முன்னதாக கொதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.