இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் இன்று வரை விளக்கமறியளில் வைக்கப்பட்டிருந்த அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போதே அவரை பிணையில் விடுதலை செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.