மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, டெல்லியில் நேற்று(சனிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் பிரச்சினையில் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மாவட்டங்களில் அவசரகால செயல்பாட்டு மையங்களை நிறுவி, அவற்றை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு காலத்தில் மக்கள் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு இந்த மையங்கள் தீர்வை தரும்.
மத்திய உள்துறை அமைச்சகம் நிறுவியுள்ள கட்டுப்பாட்டு அறை, மக்களுக்கு முழு நேர சேவை அளித்து வருகிறது. 1930 மற்றும் 1944 என்னும் ஹெல்ப் லைன் சேவைகள், மக்களின் குறைகளை தீர்த்து வருகின்றன. நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் கிடைத்து வருவது திருப்தியாக இருக்கிறது.
112 மொபைல் செயலி, இந்த ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணிகளுக்கும், முதியவர்களுக்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இந்த சேவைகளின் துணைகொண்டு, மக்கள் பிரச்சினைகளை ஊரடங்கு காலத்தில் எங்களால் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.