LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, April 23, 2020

முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை!

ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதியோர் பராமரிப்பு இல்லங்களில் பணியாளர்களுக்கு உதவுமாறு இராணுவத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் ஆகியோர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து பராமரிப்பு இல்லங்களில் வீரர்கள் தேவை என்றும், இந்த இடங்களில் உள்ள கொரோனா வைரஸ் ஒரு ‘பொங்கி எழும் காட்டுத்தீ’ போல பரவுகிறது என்றும் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் விபரித்துள்ளார்.

ஒன்ராறியோவின் 128 பராமரிப்பு இல்லங்களில் 448 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கியூபெக்கில், ஓய்வூதிய வீடுகளில் வசிக்கும் 4,000 முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், இது மாகாணத்தில் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட இறப்புகளில் 10 பேரில் எட்டுக்கும் மேற்பட்டவர்களைக் குறிக்கிறது.

ஒட்டாவாவிடம் 1,000 துருப்புக்களை அனுப்பும்படி கியூபெக் முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகால்ட் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

‘குறைவான மருத்துவ பணிகளைச் செய்வதற்கும் ஊழியர்களுக்கு உதவுவதற்கும் கூடுதல் கைகளை வைத்திருப்பது எங்களுக்கு நிறைய உதவும்’ என்று லெகால்ட் கூறுகிறார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7