யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) 10 பேருக்கு கொரோனா தொற்றுக்கான ஆய்வுகூடப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒருவர் நேற்று மாலை மன்னாரிலிருந்து போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டவர் என்பதுடன் குறித்த நபர் கடந்த மாதம் இந்தியாவிலிருந்து வந்திருந்தவர் என பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வைரஸ் தொற்றுடையவர்களோடு தொடர்புடைய மன்னார் பகுதியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கும் கொரோனா தொற்று குறித்த ஆய்வுகூடப் பரிசோதனை இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.