LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, April 1, 2020

கொரோனா அச்சுறுத்தலால் தமிழக வீடுகளில் பூரண பரிசோதனை

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அனைத்து வீடுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் இதுவரை 12 மாவட்டங்களில் மூன்று இலட்சத்து 94 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் 124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 57 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. மொத்தமாக 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் அடுத்தக்கட்ட நடவடிக்கையை சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் எடுத்துள்ளார்.

அதனடிப்படையில், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் வீடுகளில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள அனைத்து வீடுகளையும் ஆய்வுசெய்ய சில தினங்களுக்கு முன்பு அவர் உத்தரவிட்டார். அதனடிப்படையில், சுகாதாரக் குழுக்கள் வீடுவீடாகச் சென்று இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் உள்ள நபர்களைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர் யாரேனும் இப்பகுதிக்குள் இல்லை என்றால், அவர்கள் எங்கு உள்ளார் என்பதைக் கண்டறிந்து தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

அந்தவகையில் இதுவரை 12 மாவட்டங்களில் 2,271 பணியாளர்கள் மூலம் கணக்கெடுக்கும் பணி நடந்துள்ளது. இதில், ஒரு இலட்சத்து 8 ஆயிரத்து 677 வீடுகளில் இருந்த 3 இலட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் ஆய்வு மேகொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7