பிரதமர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலியில் கருத்து தெரிவித்த அவர், மக்கள் ஒன்றுக் கூடுவதை தவிர்ப்பதற்கு ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அத்தோடு அத்தியாவசிய தேவைகளற்ற அரச சேவைகளுககும் விடுமுறை வழங்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க பிரதமரிடம் யோசனையை முன்வைத்திருந்தார்.
இதேவேளை, கொரோனா தொற்றை தடுப்பதற்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளைப் போன்று பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சபாநாயர் கரு ஜயசூரிய கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.