இதன்போது சகோதரத்துவ உறவை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் பரஸ்பர உறவு பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து விவாதித்தார் என ஐக்கிய அரபு இராஜ்ஜிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்தை எதிர்த்து போராடுவது மற்றும் தொற்றுநோய் மேலும் பரவாமல் இருக்க ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்தும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது கொரோனா வைரஸிற்கு எதிரான உலகளாவிய நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஷேக் மொஹமட் பின் சயீத், வைரஸ் தாக்கத்தைத் தடுப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஆதரவுக்கு மஹிந்த ராஜபக்ஷ தனது நன்றி மற்றும் பாராட்டுகளை ஷேக் முகமதுவுக்கு தெரிவித்தார் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.